இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 30, 2013

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று

   வரைவு வாக்காளர் பட்டியலில், திருத்தங்களை கண்காணிக்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. வரும், 2014 ஜன.,1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தியாவோர், பட்டியலில் பெயர் சேர்க்கலாம். இதற்காக, இன்று முதல், அக்., 31 வரை, விண்ணப்பிக்கலாம்.

கல்லூரிகளில், 44 லட்சம் மாணவர்கள், 18 வயதில் உள்ளனர். இவர்களில், 2.5 சதவீதத்தினர் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். எஞ்சியவர்களையும் சேர்க்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும், பேராசிரியர், இரண்டு மாணவ பிரதிநிதிகளை நியமித்து, முழு அளவில், பட்டியலில் சேர்க்கப்படுவர். இதன்படி, 2014 ஜன., 6ம்தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கான உத்தரவை, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பிறப்பித்துள்ளார்.

தொழில் வரி இன்று முதல் உயர்வு

  தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இன்றுமுதல் (அக்.,1) தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்து, வரி நிர்ணயம் செய்யப்படும்

. இதற்குமுன் 1.10.2008ல் தொழில் வரி சீராய்வு செய்யப்பட்டது. தற்போது 25 சதவீதம் தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீராய்வு அடிப்படையில், 1.10.2013 முதல் 25 சதவீதமாக இருந்த தொழில் வரி, 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி இயக்குனர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வரி உயர்வு தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்.  இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு  சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர். தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Sunday, September 29, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'

பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.

இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியை துவக்கியதால், தாய் மொழி கல்விக்கு "நெருக்கடி' ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சர்வே எடுத்து வருகிறது. இப்பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் கூறுகையில்,""ஆங்கில வழிக்கல்வியால், தாய்மொழி கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி, தமிழகம் முழுவதும் சர்வே செய்து, சில பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

GO.188 SCL EDN DEPT DATED.20.09.2013 - 54 NEW PRIMARY SCHOOLS LIST RELEASED & 54 HM / SGT SANCTIONED REG ORDER

Saturday, September 28, 2013

அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும். அதுபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. தாவர அறிவியல் பட்டம், எம்.எஸ்சி. தாவரவியல் பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டம், முதுகலை பட்ட ஆசிரியர் பணி நியமனத்தின்போது எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டதாக அரசாணை வெளியிட்டுள்ளது.  

மாணவர் சேர்க்கை துவக்க அரசு உத்தரவு

  தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், 50 நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிட்களாக தரம் உயர்த்தப்படன. அப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

"புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எம்.எஸ்சி., புள்ளியியல் கணிதத்திற்கு இணையானது

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.

இந்நிலையில், எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலை வழங்கும் எம்.எஸ்சி., புள்ளியியல் படிப்பு, எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Friday, September 27, 2013

பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகிறது

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கட்டுப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து உபரி வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த லாபத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு, மாறாக உயர்ந்தது. தற்போது பெட்ரோல் விலை குறைப்பு உறுதியாகி உள்ளது. லிட்டருக்கு ரூ.2 வரை பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த விலை குறைப்பு சாத்தியமானதுதான் என்று மத்திய பெட்ரோலியம் மந்திரி வீரப்ப மொய்லி கூறி உள்ளார். இதற்கிடையே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி வாரம்தோறும் புதன்கிழமை பஸ், ரெயிலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்று பிரசாரம் செய்ய உள்ளனர். இது தவிர அரசு ஊழியர்கள் அலுலவகம் செல்ல வசதியாக பஸ்டே கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பிரசார திட்டத்துக்கு ரூ.52 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணை இறக்குமதியை கணிசமாக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மத்தியரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை- மத்திய அரசு

 நாடு முழுவதும் பல்வேறு துறைகளில்  சுமார்  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். 1998 இல் தான் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.  சமீபத்தில்  மீடியாக்கள் மத்திய அரசு  ஊழியர்களின்  வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் என செய்தி வெளியிட்டு இருந்தன.

மத்தியரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என அரசு தெளிவாக கூறி உள்ளது .  இது குறித்து மத்திய மந்திரி நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது

:- தற்போது, ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.என்று கூறினார்

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

    அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களிடையே, அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த வாரம், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தேர்வு செய்யப் பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து, அனுபவம் வாய்ந்த ஆசிரியரை அழைத்து, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்த பயிற்சியை அளித்தது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாவட்டங்களுக்குச் சென்று, பிற ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிப்பர் என்றும், பின், செயல் விளக்கத்துடன், அடிப்படை அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்குவர் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு, நேற்று, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ‘‘அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மற்றும் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்ககத்தின் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், தேவையான அளவிற்கு, அறிவியல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, செயல் விளக்கத்துடன், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில், ஆசிரியர்களுக்கு, எவ்வித சிக்கலும் ஏற்படாது,’’ என்றார்.

பணிக்கு "கல்தா' கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

    காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும் என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.

தற்போது, காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில், பள்ளிக்கல்வித்துறை கேட்கும் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் கல்வித்துறை ஊழியர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி, சி.இ.ஓ.,க்கள் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சில பள்ளிகளுக்கு டெலிபோனிலும் பேசி, பணியில் இருக்கிறார்களாக என, உறுதிப்படுத்த முயன்றனர்.

சிவகங்கை உட்பட சில மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் பணியில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் இலவச பொருட்களின் வினியோகம், கல்வித் உதவித்தொகை, தேர்வு பெயர் பட்டியல்களை பெற முடியவில்லை. அரசின் விதிமுறையை மீறி,பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவ திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து, வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தது 100 மாணவர்கள் பயில வேண்டும். கணிதத்தில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு திறனை மேம்படுத்த நூலக புத்தகங்களை உபயோகிக்க வேண்டும்.தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

Thursday, September 26, 2013

1,391 பேருக்கு மெயின் தேர்வு

துணை–கலெக்டர்–8, டி.எஸ்.பி.4, வணிகவரித்துறை உதவி–ஆணையர் 7, பதிவுத்துறை பதிவாளர் 1, மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் 5 உட்பட 25 பதவிகளுக்கு 75 ஆயிரத்து 704 பேர் முதன்மை தேர்வு எழுதினர். இவற்றிலிருந்து 1,391 பேர்கள் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது

      குரூப் VIII  தேர்வு நவம்பர் 26ல் நடக்கிறது.குரூப்.1 தேர்வுக்கு காலிப்பணியிட விபரம் சேகரிக்கப்பட்டுவருகிறது

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது

      பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. மாநில அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அந்தந்தப் பாடங்களுக்கான புத்தகங்களை எழுதும் பணி தொடங்கும் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகங்களை எழுதவும், புத்தகங்களில் குறைபாடுகளை சரி செய்யவும் குறைந்தபட்சம் பத்து மாதங்கள் வரை ஆகலாம். புதிய புத்தகங்கள் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் தயாராகும்.

எனவே, பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2015-16 கல்வியாண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2016-17 கல்வியாண்டிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது.

புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறைக்குக் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் வல்லுநர் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வல்லுநர் குழுவிடம் இப்போதுள்ள பாடத்திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், புதிதாக சேர்க்கப்படவுள்ள பகுதிகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும்போது மிகவும் திணறுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பொறியியல் கணிதம் ஒரு பாடமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதியப் பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி கட்டண நிர்ணய விசாரணையில் பெற்றோரையும் சேர்க்க பரிசீலனை


தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விசாரணையில், பெற்றோரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளையும் கேட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலு தெரிவித்தார். தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரை, நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், கட்டண நிர்ணய விசாரணையில், பள்ளி நிர்வாகத்தின் கருத்து மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால், பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விசாரணையின்போது, பெற்றோரையும் அழைத்து, கருத்து கேட்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு, குழு தலைவர், சிங்கார வேலு பதிலளிக்கையில், விசாரணையில், பெற்றோரையும் சேர்ப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், கட்டண நிர்ணய குழு கூட்டத்தை கூட்டி, அதில், இதற்கான முடிவு எடுக்கப்படும், என, தெரிவித்தார்.

சென்னையில், அதிக கட்டணம் வசூலித்த சில பள்ளிகளுக்கு எதிராக, பெற்றோர், குழு தலைவரிடம் புகார் அளித்தனர். அதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, குழு எதுவும் செய்ய முடியாது, என, சிங்காரவேலு தெரிவித்தார்.

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்' : காந்தி பிறந்த நாளில் குதூகல ஆரம்பம்

 
கல்வி தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை'களை திறப்பதற்கு, இடைநிலைக் கல்வி திட்ட மாநில இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, திட்ட இயக்குனர், சங்கர், வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளி சூழலில், மாணவர்களை, சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும். கல்வி மட்டுமில்லாமல், பல்வேறு திறன்களையும், நற்குணங்களையும் வளர்ப்பதற்கு, கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், நேர்மை மற்றும் நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கில், "நேர்மை அங்காடி' என்ற கடைகள், காந்தி பிறந்த நாளான, அக்., 2ல், 44 மாதிரிப் பள்ளிகளிலும் துவங்கப்படும். இந்த கடைகள், யார் மேற்பார்வையும் இல்லாமல், பள்ளி வளாகத்தில் இயங்கும். இந்த கடையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் இருக்கும்.

அதற்கான விலை தாங்கிய அறிவிப்பும், அங்கே இருக்கும். மாணவர்கள், நேரடியாக, கடைகளுக்குச் சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை, அங்குள்ள பண பெட்டியில் செலுத்த வேண்டும். ஆரம்ப கட்ட முதலாக, 500 ரூபாயுடன், கடையை துவக்க வேண்டும். பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து, இந்த தொகையை, தலைமை ஆசிரியர் செலவழிக்கலாம். பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை, சூநேர்மை கடை'யில் விற்பனை செய்ய வேண்டும். பொருட்களின் விலையை, எந்த காரணம் கொண்டும், லாப நோக்கில் நிர்ணயம் செய்யக் கூடாது. வாங்கிய விலையிலேயே, பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இதை, தலைமை ஆசிரியர், கண்காணிக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை, அக்., 4ம் தேதிக்குள், இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Annamalai University UG&PG results released May 2013

Wednesday, September 25, 2013

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:

இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-
First Paper
(Relating to Secondary and Special
Schools) (without
books)
2. 017 - Deputy Inspector’s Test--
Second Paper
(Relating to Elementary Schools)
(Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books).

மாவட்டக்கல்வி அலுவலர்
1 . 176 - Account Test for
Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive
Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu
Government Office Manual Test
(Previously the District Office
Manual--Two Parts) (With
Books)."