இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 31, 2013

ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள

் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. இதில் உளவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) காலை 10 மணிக்கு பல்லடம் காவல்நிலையம் எதிரே ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள அம்பேத்கர் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 9659368665, 9965386569, 9443937063 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை தலித், பழங்குடி பிரிவு மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது. (நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.05.2013)

அரசுபள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு அனைத்து இலவச பொருட்களும் வழங்க ஏற்பாடு

   அரசுமற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படாது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் உட்பட, 16 வகையான இலவச பொருட்களை, தமிழக அரசு வழங்குகிறது. 2012 -13 ம் கல்வியாண்டில் காலணி, அறிவியல் உபகரண பெட்டி தவிர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. வரும் கல்வியாண்டு துவக்கத்தில், அனைத்து இலவச பொருட்களையும் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, ஜூனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களின் எண்ணிக்கை விவர பட்டியலை வழங்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், " மாணவர்களுக்கு முன்கூட்டியே இலவச பொருட்களை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுபள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து இலவச பொருட்களும் வழங்கப்படும்' என்றார். இது குறித்து, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,

"தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுமற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், அரசின் இலவச பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட வகுப்பு என்றில்லாமல், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, எந்த வகுப்புகளில் புதிதாக சேர்ந்தாலும், அந்த மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்கப்படும்' என, தெரிவித்தன.-

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 75 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 50 பைசாவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்புவரை பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பின்னர் கடைசி முன்று மாதங்களி்ல் சர்வதேச சந்தையி் கச்சா எண்‌ணெயி்ன் விலை குறைவையடுத்து பெட்ரோலின் விலை குறைந்து வந்தது. இந்ந‌ிலையில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜுன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல், உடனடித் தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையடுத்து, அதற்கான மதிப்பெண் பட்டியல், ஜுன் 20ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடமும், தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், ஜுன் மற்றும் ஜுலை மாதம் நடக்குமூ உடனடி தேர்வில் பங்கேற்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக, உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜுன் 3 முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

அதற்கான தேர்வுக் கட்டணத்தை ஜுன் 6ம் தேதிக்குள், SBI வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மார்ச் தேர்வை தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வியடைந்தவர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் ஜுன் 10ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.

தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியை எட்டியது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்குப்படி, 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே, 61 லட்சத்து 37 ஆயிரத்து, 975ம், பெண்கள் 3 கோடியே, 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 ஆகும். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 3 கோடியே, 22 லட்சத்து 29 ஆயிரத்து 590 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை 97 லட்சம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவிற்கு ஆணுக்கு ரூ.6000 மற்றும் பெண்ணுக்கு ரூ.10,000 முன்பணம் 2013-14 ஆம் ஆண்டிற்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

Wednesday, May 29, 2013

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் மட்டும் வெளியீடு

  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 31) காலை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்களில் மொத்தம் 11 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வ

் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Tuesday, May 28, 2013

ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் அதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் 25 சதவீத இடங்களை ஏழைகள், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடு தொடர்பாக பெற்றோர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்களுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளிடமும் இந்த விண்ணப்பங்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனவே, இந்த இடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதோடு, மாணவர் சேர்க்கைக்கு இரண்டு வாரங்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் தவிர பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழைகள், சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த 25 சதவீத இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள் தேர்வு: மாணவர்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதலாம் ஜெயலலிதா அறிவிப்பு

கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து இன்று தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன். இந்த விவாதத்தின்போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. விருப்பப்படி தேர்வு எழுதலாம் ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ, மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் ஆகும். எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ, மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப்பெற நான் ஆணையிட்டுள்ளேன். எனவே, அனைத்து மாணவ, மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 27, 2013

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 19-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 ஆகும். ஆசிரியர் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களுக்கு மதிப்பெண்ணும், அடுத்தக் கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். பல்கலைக்கழகங்கள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் (அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்: கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண் வழங்கப்படும். அந்தந்தப் பாடத்தில் பிஎச்.டி. பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்ணும், எம்.பில். பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்ணும், பட்டமேற்படிப்புப் பட்டமும் ஸ்லெட், நெட் தேர்ச்சியும் பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்: நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு இல்லாமல் 24 மதிப்பெண்ணுக்கு விண்ணப்பதாரர் பெறும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேங்க் பட்டியலில் இருந்து 1:5 என்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி:  பொதுப்பிரிவினராக இருந்தால் 55 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டமேற்படிப்புப் பட்டம் மற்றும் யு.ஜி.சி., சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புகள் நடத்தும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்ட மேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் என்றால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்ட மேற்படிப்பு மற்றும் நெட், ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எச்.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜூலை 1-ம் தேதியுடன் 57 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி வீதம் 32 மையங்களிலும், சென்னையில் இரண்டு கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். விண்ணப்பத்தை ரூ.100 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பரிசீலனைக் கட்டணமாக விண்ணப்பத்துடன் ரூ.500 செலுத்த வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மையங்களிலேயே சமர்ப்பிக்கலாம்.

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கப் பெறாத 75 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களின் விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விடைத்தாள் நகல்கள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்தி:

வேதியியல் பாட விடைத்தாள் நகல் கோரியவர்கள், விடைத்தாளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த நகலை பதிவிறக்கம் செய்ய ங்ஷ்ஹம்ள்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதள முகவரிக்குச் சென்று கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 1. விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங் ய்ன்ம்க்ஷங்ழ். 2. பதிவெண் 3. பிறந்த தேதி 4. மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டிஎம்ஆர் கோட் விவரம்

மறுகூட்டலுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? வேதியியல் பாட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, அந்தப் பாடத்தில் மறுமதிப்பீட்டுக்கோ அல்லது மறுகூட்டலுக்கோ விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் examsonline.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி மே 29 முதல் 31-ஆம் தேதி பிற்பகல் 1 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டேட் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை எஸ்.பி.ஐ. வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் மே 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மற்ற பாடங்களுக்கான விடைத்தாளின் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் எச்சரிக்கை தேவை

் கடந்த சில ஆண்டுகளாகவே விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் கோரியும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவரகள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். பி.இ., எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் ஒரேயொரு மதிப்பெண்கூட ரேங்க் பட்டியலில் பல இடங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதால் விடைத்தாள் நகலைப் பார்க்கவும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவர்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் கிடைத்தவுடன் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவர்களுக்கும் விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் குறைந்துள்ளது. மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தாலோ, அதிகரித்தாலோ அந்த மதிப்பெண்தான் இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, விடைத்தாள் நகலைப் பெற்றவுடன் அந்தந்தப் பாட ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பதால், மதிப்பெண் வழங்கப்படாத அல்லது தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு கேள்வியை கருத்தில்கொண்டு மட்டும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளில் உள்ள பிற கேள்விகளுக்கான விடைகள், அவற்றுக்கான மதிப்பீடுகளையும் பாட ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்த பிறகு மதிப்பெண் குறைய வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

இதுவரை முடிவு எடுக்கவில்லை புதுச்சேரியில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது தெரியும். தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துவருகிறது.

சென்னையிலும் மற்ற இடங்களிலும் வெயில் அளவு நிறையவே குறைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) வெயில் குறைகிறதா என்று பார்க்கப்படும். இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறப்பு தள்ளிப்போடுவது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Sunday, May 26, 2013

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

  எதிர்பார்த்து காத்திருந்த சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு முடிவுகள் ஒருவழியாக இன்று வெளியிடப்பட்டது. தென்மண்டலத்தில் தேர்வு எழுதியவர்களில் 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடந்தது. முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். இந்தியா முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

ப்ளஸ் 2 "மார்க்ஷீட்' இன்று வழங்கல்

ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது. ப்ளஸ் 2 "மார்க் ஷீட்' இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்' வினியோகம் செய்யப்படுகிறது.

ப்ளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்து கொள்ள ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யம் பணி நடக்கவுள்ளது. வரும் ஜூன், 10ம் தேதி வரை, பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, மே 27ம் தேதி முதல் சீனியாரிட்டி வழங்கப்படும் என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

CBSE Exam Results 2013 .Results Link

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

  தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே முதுகலை ஆசிரியர், உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ., வரை பதவி உயர்வு பெற முடியும். இதனால், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பலர், பள்ளிக்கல்வித்துறைக்கு இடமாற்றம் பெற்றனர். ஆனாலும், யூனிட் டிரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு, புதிதாக பணியில் சேர்ந்த இடத்தில் பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்பதால், பதவி உயர்வு கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த டிஆர்பி தேர்வின்போது, தொடக்கப்பள்ளிக்கா? உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கா? என கூறவில்லை. ஆனால், போட்டித்தேர்வு மூலம் அதிகை ரேங்க் பெற்று தொடக்கப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த எங்களை காட்டிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும், ரேங்க் குறைவாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சீக்கிரத்தில் பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். யூனிட் டிரான்ஸ்பரில் செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, புதிதாக எந்த இடத்தில் பணியில் சேர்கிறாரோ அந்த இடத்தில் கடைநிலை சீனியாரிட்டியில் வைக்கப்படுவர். அதே விதிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது. இதனால், யூனிட் டிரான்ஸ்பரில் சென்றுள்ள 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கிட்டு, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர்.