இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 31, 2012

தேசிய திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்.7 வரை கால நீட்டிப்ப

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 18-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை ஆகஸ்ட் 21 முதல் 31 வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் செப்டம்பர் 7-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 7, 8ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.

இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் ( www.trb.tn.nic.in) அழைப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த இணையதளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ்

TNPSC DEPARMENTAL EXAMINATION DECEMBER 2012

Advertisement No.318

Dept Exam wil be held from 23.12.12 to 31.12.12
Apply online only

1.cost of registeration Rs30
Exam fee Rs.50 for each test

2.notification release soon

3.hall ticket can be download 17.12.2012-31-12-12

4.Last date online till 5.45pm on 30.9.2012

கதிர்வீச்சு: ‌செல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்

செல்போன் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் செல்போன் ஹேண்ட் செட்டுகள் குறித்து புதுவிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய தொலை தொடர்‌புத்துறை அமைச்சர் ‌தெரிவித்தார். செல் போன் கோபுரங்களால் அதிகளவு கதிர்வீச்சுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் புதிய விதிகள் குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் வருமாறு: ‌செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும். இரு செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 35 மீ தொலைவில் இருக்க வேண்டும். மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அ‌ட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7,8 ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் செய்ய,கீழே கிளிக் செய்யவும்
TamilNadu Teachers Eligiblity Test 2012- TentativeList of Candidates Called for Certificate Verification and Individual Query for Paper - I and Paper - II

http://www.trb.tn.nic.in/TET2012/31082012/msg.htm

CCE Co-Scholastic Training for Primary Teachers

டிஇடி மறுதேர்வுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க திட்டம

டி.இ.டி ஆசிரியர் மறுதேர்வு அக்டோபர் 3ம் தேதி டிஆர்பி நடத்தவுள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் பள்ளிகள் இயங்கும் நாளாக இருப்பதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக டி.ஆர்.பி தெரிவித்துள்ளது.  இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரிதான "புளூ மூன்' இன்றிரவு காணலாம்  

இந்த மாதத்தில் இரண்டாவது முழு நிலவை இன்று காணலாம். இதுதொடர்பாக, டில்லியில் உள்ள இந்திய கோளரங்க சங்கத்தின் இயக்குனர் ஸ்ரீரகுநந்தன் குமார் கூறியதாவது:இந்த மாதத்தில், முதன்முதலாக, 1ம் தேதி பவுர்ணமி வந்தது. மீண்டும் இன்று பவுர்ணமி வந்துள்ளது. இன்று இரவு, 7:28 மணிக்கு முழு நிலவை காணலாம். ஒரு மாதத்தில், இரு முறை பவுர்ணமி வருவது அரிதானது.

அப்படி இரண்டாவது முறையாக தோன்றும் முழு நிலவு, "புளூ மூன்' என, அழைக்கப்படுகிறது.அடுத்த, புளூ மூன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015 ஜூலை, 31ல் தோன்றும். சந்திரன் ஒரு முறை பூமியைச் சுற்றி வர, 27 நாட்களுக்கு மேலாகிறது. அதனால், மாதம் ஒரு முறை பவுர்ணமி வரும். ஆனால், "புளூ மூன்' என்பது, சராசரியாக, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். இன்று மாலை, 6:13 மணிக்கு, நிலவு உதயமாகும். இரவு, 7:28 மணிக்கு முழுமையான அளவில் தோன்றும். கடந்த முறை, 2009 டிசம்பரில், "புளூ மூன்' தோன்றியது எனக் கூறினார்.

5-ம் வகுப்பில் இருந்து மாணவர்களின் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிக்க முடிவ

பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

பாடத்தில் வாங்கும் மதிப்பெண்களுடன் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 5-ம் வகுப்பில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பரிந்துரைகள் கோரப்பட்டு, பள்ளிகளில் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

விரைவிலேயே இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. உடல் தகுதி தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இதயம், உடல் பலம், உடல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உடற்பரிசோதனையில் இடம்பெறும். அதன் அடிப்படையில் மதிப்பெண் அல்லது கிரேடு அளிக்கப்படும். சிறந்த உடல் அமைப்பு, உடல் தகுதியை கொண்ட மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் அளிக்கவும், மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Justice Thiru S.R Singaravelu, Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.

Thursday, August 30, 2012

சிறப்பு தேர்வுக்கு இனி "ஆன்-லைன்' விண்ணப்பம்  

சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, கருவூலத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு துறைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வந்தனர்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிப்பு வெளியாகும் போது, மாணவர்களுக்கு அலைச்சலும், சிரமமும் ஏற்பட்டது.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு "ஆன்-லைனில் விண்ணப்பிப்பது போன்று, நடப்பு கல்வி ஆண்டு முதல், சிறப்பு தேர்வு, மதிப்பெண்கள் மறு கூட்டல், அக்டோபரில் நடைபெறும் சிறப்பு தேர்வு ஆகியவற்றிற்கு, இனிமேல் "ஆன்-லைன்' மூலம் தான், விண்ணப்பிக்க வேண்டும், என அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. www.dge.tn.nic.in என்ற வெப்சைட் முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.

தொடக்க பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் எப்படி?நேரில் கண்டறிந்து ஆய்வ

தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது."அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சில மாதங்களுக்கு முன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான வசதிகள் என, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

தற்போது, தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிய, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், ஒன்றியத்திற்கு, ஐந்து தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூன்று; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி அல்லது ஆதிதிராவிட நலத்துறை பள்ளி தலா, ஒன்று என, பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், இரண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவற்றை சோதித்து, அவற்றுக்கு மதிப்பெண் போடுகின்றனர். மொழிப் பாடங்களில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; வாசிப்புத் திறனுக்கு, 40 மதிப்பெண்; கணிதப் பாடத்தில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; மனக்கணக்கிற்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படுகிறது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிவதற்காக, தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், ஆறாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படும். ஆய்வின்போது கிடைக்கும் விவரங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பப்படும். ஆய்வு அடிப்படையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

"போஸ்டர்' தயாரித்தல் போட்டி

அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு "போஸ்டர்' தயாரித்தல் போட்டி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களுக்கு உலக வெப்பமயமாதல், வாழ்க்கை விலை மதிப்பற்றது, வளர் இளம்பருவ கல்வி, நிலையான வளர்ச்சி, ஆண்,பெண் சமநிலை, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது.

மாணவர்கள் "சார்ட் போர்டில்' ஓவியம் வரைந்து, அதற்கு தகுந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும். செப்., 3 ல், மாவட்ட அளவில் இப் போட்டிகள் நடக்கின்றன. முதல் மூன்று இடங்களை பிடிப்போர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு, அனுப்பி வைக்கப்படுவர். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

Minorities Welfare _ Post- Matric Scholarships 2011-12

மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

் சொந்த மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பினார்கள். இதையடுத்து செல்போன் மூலம் வதந்தி பரவுவதை தடுப்பதற்காக, மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17-ம் தேதி தடை விதித்தது.   ஒரே நேரத்தில் 5 தகவல்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   இந்நிலையில் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதல் பீதி ஒரளவு குறைந்தபின்னர், 20 எஸ்.எம்.எஸ். வரை மொத்தமாக அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது அந்த கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப விதிக்கப்பட்ட தடை முழுவதும் நீக்கப்படுவதாகவும், இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

TRB PG Tentative List for Department of School Education

Tirupur dist Minority scholarship, student name List

Wednesday, August 29, 2012

காலாண்டுத் தேர்வு அட்டவணை

செப் 12
பத்தாம் வகுப்பு
12-9-12=மொழி.முதல்.தாள்

13-9-12=மொழி இரண்டாம் தாள்

14-9-12=ஆங்கிலம் முதல் தாள்

15-9-12=ஆங்கிலம் இரண்டாம் தாள்

17-9-12=கணிதம்

18-9-12=அறிவியல்

20-9-12=சமூக அறிவியல்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்  

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற, 1,735 பேரை, விரைவில் வெளியாக உள்ள, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், "மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரை கிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

அரசு விருப்பம்: தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்து வருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: "நபார்டு' வங்கி ரூ.129 கோடி ஒதுக்கீட

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, "நபார்டு' வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, "நபார்டு' வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர். ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப்டம்பரில் வழங்க முடிவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்., இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன. பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன.

வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்., இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று முதல் பி.எட்., கலந்தாய்வு துவக்கம்

பி.எட். ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கான கலந்தாய்வு சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று துவங்கியது. அரசு மற்றும் அரசு சார்ந்த 21 கல்லூரிகளுக்கான 2,118 இடங்கள் நிரப்பப்படுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.மொத்தம் 10,386 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கலந்தாய்வு செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் 237 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

Annamalai University May 2012 Result Released

Tuesday, August 28, 2012

இன்று அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுக

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் இன்று (ஆகஸ்ட் 29-ந் தேதி) முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.  

÷இன்டர்நெட் முகவரிகள்: ‌w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌i‌n‌d‌i​a‌r‌e‌s‌u‌l‌t‌s.c‌o‌m,​​ ‌w‌w‌w.‌h‌m‌h.ac.‌i‌n,​​ ‌w‌w‌w.‌sc‌h‌o‌o‌l‌s9.c‌o‌m​ ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். ÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில்  RCQ​ E‌n‌r.‌n‌o,​​ RCQ R‌e‌g.‌n‌o என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  

÷வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பிகாம் இன்டர்நேஷனல் பிசினஸ், பிகாம் அக்கவுண்டிங் அன்ட் பைனான்ஸ், பிகாம் பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்மென்ட், பிகாம் பிசினஸ் ஸ்டடிஸ், பி.பி.எம். மற்றும் பிகாம் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம் உள்ளிட்ட வகுப்புகள்.

குரூப்-4 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதா?-

ஜூலை 7ம் தேதி நடந்த குரூப்-4 தேர்வின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக, போலீஸ் காவலில் உள்ளவர் தகவல் தெரிவித்துள்ளதால், இத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 10,718 காலிப் பணியிடங்களுக்கு, ஜூலை 7ம் தேதி, குரூப்-4 போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வை, 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர்.

கடந்த 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எட்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதில், சதீஷ்குமார் என்பவர், குரூப்-4 கேள்வித்தாளும் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டதாக, போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால், இத்தேர்வும் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் கூறியதாவது: ஒவ்வொரு தேர்வு முடிந்ததும், அதைப்பற்றி ஏதாவது கூறுவார்கள். இதற்கு முன், இதேபோல் பலர் வதந்தியை கிளப்பினர். அவையெல்லாம் உண்மையில்லை என்பது, பின் தெரிந்தது. விசாரணையில், குரூப்-4 கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியானதாக ஒருவர் கூறினாலும், தேர்வு நடப்பதற்கு முன் எந்த தேதியில் வெளியானது, அதில், யார், யாருக்கு தொடர்பு உள்ளது, என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக, காவல்துறை அறிக்கை வந்தால் தான், எதுவுமே கூற முடியும். குரூப்-4 கேள்வித்தாள், முன்கூட்டியே வெளியாகி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு நடராஜ் கூறினார். ்

ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!


ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர்  வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். மக்களை காண வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும், ஆணவம் அகன்று, சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தை ஓணம் பண்டிகை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி வாழ்த்து

திமுக. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"தமிழ்ச் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லமல், தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்கள் வாழ்விலும் எப்போதும் உரிய கவனம் செலுத்தி வரும் திமுக சார்பில், மலையாள மக்கள் அனைவர் வாழ்விலும் என்றும் வளம் குவிய, நலம் பொலிய இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்"என்று குறிப்பிட்டுள்ளார்.